தினாஸ்ட்ரோ
தினாஸ்ட்ரோ தங்களை அன்புடன் வரவேற்கிறது !
எல்லோருக்கும் தங்கள் ஜாதகத்தை கணித்து, எதிர் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பது இயற்கையே ! அதற்காக தாங்கள் மிகச் சரியான இணையதளத்திற்கு வந்தமைக்குப் பாராட்டுக்கள்.
தினாஸ்ட்ரோ ஜோதிட ஆராய்ச்சி நிலையம், பல ஆண்டுகளாக ஜோதிட ஆய்வுகள் செய்து, பல ஜோதிடக் கட்டுரைகளை வலைப்பூவில், முகநூலில் பதிவிட்டு, களப்பணிகள், ஜோதிட முகாம்களை நடத்தி, மக்களுக்கு ஜோதிடம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
மக்களிடையே உள்ள அறியாமையை அகற்றி, மனதில் நீண்ட காலமாக குடியிருக்கும் தோல்வி மனப்பான்மை, குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்றவைகளை அகற்றி, நேர்மறை எண்ணங்களை விதைப்பதே எமது நோக்கமாகும்.
எந்த விஷயமும் இல்லாமல், உண்மைத் தன்மை இல்லாமல், இந்த ஜோதிட சாஸ்திரம் ஆயிரக்கணக்கான வருடங்களாக தாக்குப் பிடித்து நிலைத்து நிற்க முடியுமா? ஜோதிடம் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம்முடைய ரிஷி முனிவர்கள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களாகும் (Statistics). பல்லாயிரக் கணக்கான மனிதர்களை, உற்று நோக்கி, அந்த மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த, நிகழ்வுகளை பதிவு செய்திருக்கின்றனர். நம் முன்னோர்கள் காட்டிய வழியில், சூத்திரங்களை வைத்து கணக்கீடு செய்து, பலன் கூறுவதால், ஜோதிடம் எப்போதும் பொய்யாகாது. அதனால் ஜோதிடமும் ஒரு அறிவியலேயாகும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
